உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் திடீரென களமிறங்கிய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள்!

வளி மாசடைதலை தடுக்கும் முகமாகவும் மனிதர்களுக்கு மாசு இல்லாத சுத்தமான காற்றையும், தூய்மையான சூழலையும் உறுதி செய்யும் நோக்கோடும் “சுவாசிக்கும் தன்மையை உறுதிப்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நாடளாவிய ரீதியில் மும்முரமாக வாகனப் புகை பரீட்சித்தல் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

அதன் தொடரில், செவ்வாய்க்கிழமை (12) ஓட்டமாவடி பிரதான வீதியில் திடீரென களமிறங்கிய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள், அரச வாகனங்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களை எழுமாறாக பரிசோதனை செய்தனர்.

இதில், அதிக புகை வெளியிடும் வாகனங்கள் மற்றும் மேலதிக உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்த வாகனங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சோதனை செய்யப்பட்ட வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வளி மாசடைதலை தடுக்க வேண்டிய அவசியம் பற்றியும் சாரதிகளுக்கு அதிகாரிகளால் தெளிவுபடுத்தப்பட்டன.

மட்டக்களப்பு மோட்டார் வாகன போக்குவரத்துக் திணைக்களத்தின் மோட்டார் வாகன பரிசோதகர் கே.கே.என்.எம்.குணதிலக தலைமையில் கொழும்பு தலைமை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் (VET) தொழில்நுட்ப உதவியாளர் என்.எம்.எம் மர்சூக் ஏற்பாட்டில் இச்சோதனை நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின்
இச்சோதனை நடவடிக்கையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ட்ரைவ் கிரீன் தொழில்நுட்பவியலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களை 14 நாட்களுக்குள் ஒழுங்கு படுத்தி வருமாறு தண்டப் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

ஊழல், மோசடி மற்றும் வீண்விரயத்தை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம் – பிரதமர் ஹரிணி

editor

திருப்பதி பயணத்தில் பிரதமர்

1700 ரூபா சம்பளம்: நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு