அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை பிறப்பித்துள்ளது.

ராஜித சேனாரத்ன வாக்குமூலம் அளிப்பதைத் தவிர்த்து விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு, கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Related posts

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த 20 நாள் குழந்தை

பொலிஸ் அதிகாரிகள் 21 பேருக்கு இடமாற்றம்

கப்பலின் தீ பரவல் கட்டுக்குள் – நன்றி தெரிவித்த ஜனாதிபதி