உள்நாடு

வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் போர்வையில் தங்க பிஸ்கட்டுகள் கடத்தல் – ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால், ரூ. 115 மில்லியனுக்கும் மேல் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சுமார் 3 கிலோகிராம் 266 கிராம் எடையுள்ள 28 தங்க பிஸ்கட்டுகளை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 58 வயது நபர் என தெவிக்கப்படுகிறது.

குறித்த நபர் நேற்று (11) காலை 9.30 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

அதன்பின்னர் வாகன உதிரி பாகங்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை செலுத்திவிட்டு திரும்பியபோது, சந்தேகத்தின் பேரில் அவர் CID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இவை, வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் போர்வையில் துபாயிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கெஹெலியவுக்கு 16 வங்கிக் கணக்குகள்!

editor

மன்னார் துப்பாக்கிச்சூடு சம்பவம் – மேலும் ஒருவர் கைது

editor

கொரோனாவிலிருந்து மேலும் 293 பேர் குணமடைந்தனர்