உள்நாடுகாலநிலை

இன்று பல இடங்களில் மழை பெய்யும்

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்
என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் 16 பேர் பூரண குணம்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாமலை சந்தித்தார்

editor

தற்காப்புக்காக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்

editor