அரசியல்உள்நாடு

இந்த அரசாங்கமும் இளைய தலைமுறையினரின் கனவுகளை குழிதோண்டி புதைத்து வருகிறது – சஜித் பிரேமதாச

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. சுமார் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் வேலையின்றி இன்னும் வீதிகளிலயே காத்திருக்கின்றனர்.

தேர்தல் காலத்தில் இந்த வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வாக “வளமான நாடு, அழகான வாழ்க்கை” எனும் கொள்கை அறிக்கையின் பக்கம் 72 இல் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், இவற்றில் எதுவும் இதுவரை இவர்களால் நிறைவேற்றப்படவில்லை. இந்த ஆட்சியிலும் பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

பட்டதாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் மீறியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) விசேட கூற்றை முன்வைத்து தெரிவித்தார்.

35,000 பட்டதாரிகளுக்கு தொழில் தருவோம். இவர்களில் 20,000 பேருக்கு ஆசிரியர் தொழில் தருவோம் என எவ்வாறு வேலை வழங்கப்படும் என்பதும் இந்த அரசாங்கம் முன்வைத்த கொள்கை அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு சுங்கத் திணைக்களம், இறைவரித் திணைக்களம், சுற்றுலாத் துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்றவற்றில் ஆட்சேர்ப்புகளை செய்வோம் என தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு வேலைகளை வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் தேர்தல்களில் வெற்றி பெற்ற தன் பிற்பாடு அவர்களால் இன்னும் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதுபோயுள்ளன.

2/3 பெரும்பான்மையையும், பாராளுமன்றத்தில் 159 உறுப்பினர் பெரும்பான்மையையும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மையையும் வென்றிருந்தும் கூட, வேலையற்ற பட்டதாரிகளுக்கு இன்னும் தொழில் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வேலையற்ற பட்டதாரிகளின் பிரதேச, மாவட்ட, மாகாண ஒன்றியங்களில் உள்ளவர்களுக்கு வாக்குறுதிகளுக்கு மேல் வாக்குறுதிகளை வழங்கி, பட்டதாரிகளைப் தமது தேவைகளுக்குப் பயன்படுத்தி, தமது வாக்குகளை அதிகரித்து வெற்றி பெற்றாலும், ஆளுந்தரப்பைச் சேர்ந்த சகலரும் பட்டதாரிகள் விடயத்தில் இன்று கரிசனை செலுத்துவதாக இல்லை. சகலரும் அவர்களை புறக்கணித்து வருகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு பயந்து தான் அரசாங்கமும் ஜனாதிபதியும் இவ்வாறு தொழில் வழங்காதிருக்கின்றனரோ என்ற சந்தேகம் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முந்தைய அரசாங்கத்தைப் போலவே, இந்த அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்திற்கு பயந்து, இளைய தலைமுறையினரின் கனவுகளை குழிதோண்டி புதைத்து வருகிறது. இந்த வேலையற்ற பட்டதாரிகள் என்போர் வெறுமனே அரசியல் கைப்பாவைகள் அல்லர்.

மாறாக படித்த, அறிவுச் சமூகத்தினர் ஆவர். இவர்கள் நாட்டின் வளங்கள் ஆகும். இவர்களைத் தொடர்ந்தும் ஏமாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது விடயம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்தப் பட்டதாரிகளுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இவர்களை நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம். இருந்தாலும் இவ்வாறான முயற்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லை.

இப்போதாவது இவர்களை தொழிலுக்கமர்த்தி, உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கி, அத்தியாவசிய துறைகளில் ஈடுபடுத்த வேண்டும்.

இந்த ஏமாற்று அரசியல் முறையை நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த வேலையற்ற பட்டதாரிகளின் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்பதால், இவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related posts

மேலும் 462 பேருக்கு கொரோனா தொற்று

மீண்டும் உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானம்

editor

புதிய கூட்டணியுடன் இணைய தயார் – சஜித்