உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – ஒருவர் பலி – மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மிருசுவில் பகுதியில் நேற்று (10) இரவு நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

கிளிநொச்சி திசையிலிருந்து யாழ் திசை நோக்கி பயணித்த காரும் – யாழ் திசையிலிருந்து கிளிநொச்சி திசை நோக்கிப் பயணித்த டிப்பர் கூலர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் 35 வயதான நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான வாகனங்கள் கடுமையாக சேதமடைந்ததுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-பிரதீபன்

Related posts

வெல்லஸ்ஸ கிளர்ச்சிக்கும் ராஜபக்ஷர்கள் கிளர்ச்சிக்கும் வேறுபாடு இல்லை

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

editor

கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியுடன் டுபாய்க்கு தப்பியோடிய சம்பவம்

editor