உலகம்

நியூசிலாந்தில் புதிய விசாக்களை அறிவிக்கத் திட்டம்

நியூசிலாந்தில் புதிய தொழில் விசாக்களுக்கான விண்ணப்பங்கள் டிசம்பரில் கோரப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி விவசாயம், வனவியல் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளை ஆதரிப்பதற்கான புதிய தொழில் விசாக்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நியூசிலாந்தின் குடியேற்ற அமைச்சர் கூறுகையில் ,

கிராமப்புற ஒப்பந்ததாரர்கள், வைன் தயாரிக்கும் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு மூன்று ஆண்டு உலகளாவிய பணியாளர் பருவகால விசா அறிவிக்கப்படவுள்ளது.

இந்த விசா மிகவும் திறமையான தொழிலாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

“குடியேற்றத்தில் எனக்குக் கிடைக்கும் வாய்ப்பு பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் குறுகிய கால அளவுகோல்கள்” என்று அமைச்சர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விசா உள்ளவர்கள் மூன்று ஆண்டு காலத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் நியூசிலாந்திற்குள் நுழைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா – 185 நாடுகளை ஆட்டிப்படைக்கும் வைரஸ்

விமானங்கள் இரத்து – மக்கா, ஜித்தா நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

editor

தனது 63 ஆவது விண்கலத்தை அனுப்பிய நாசா!