உள்நாடுவிசேட செய்திகள்

நாளை 10 மணி நேர நீர் வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொடை கூட்டு நீர் விநியோக அமைப்பின் நிட்டம்புவவிலிருந்து மினுவங்கொடை வரையிலான குழாய் சுத்திகரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று அந்த சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 10 மணி நேரத்திற்கு ரன்பொகுணகம, பட்டலிய, அத்தனகல்ல, பஸ்யால மற்றும் நிட்டம்புவ ஆகிய வலயங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

இதற்கமைய நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கொங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்தை, கொலவத்தை, கொரக்கதெனிய, ரன்பொகுணகம, ரன்பொகுணகம வீடமைப்புத் திட்டம், படலிய, அத்தனகல்ல, பஸ்யால, ஊராபொல, திக்கந்த, மவிட்டிகம்மன மாஇம்புல, மாதலான, ஹக்கல்ல, அலவல, கலல்பிட்டி, எல்லமுல்ல ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சீரற்ற காலநிலையினால் 12,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கொழும்பு கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து

editor

BREAKING NEWS – இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டு – ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை

editor