உள்நாடு

பிரதேச சபை ஊழியர்களின் சம்பளம் மோசடி – இருவர் கைது

சுமார் நான்கு ஆண்டுகளாக களுத்துறை பிரதேச சபை ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒன்றரை மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறையின் போமுவல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் என்றும் சந்தேக நபர் வாதுவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என்றும் கூறப்படுகிறது.

களுத்துறை பிரதேச சபையின் செயலாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீண்ட விசாரணைக்குப் பின்னர் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மோசடி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர், மேலும் சந்தேக நபர்கள் களுத்துறை நீதுவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

வரலாற்றில் முதன் முறையாக..

சுகாதார துறை தவறுகள் பற்றி விசாரணைகள் தேவை – நாமல்

நாடாளுமன்ற புதிய பதவிக்கு 6 இலட்சம் சம்பளம்