உள்நாடுபிராந்தியம்

பஸ்சுக்குள் கத்திக்குத்து – மனைவி படுகாயம் – கணவன் கைது

பதுளையில் பண்டாரவளை பிரதான பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுக்குள் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி படுகாயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (09) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதுடைய மனைவியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த மனைவி பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் குறைகிறது அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணம்

அங்குலான பதற்ற நிலை சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது

பொலிஸ் உத்தியோகத்தர்கள் 14 பேருக்கு இடமாற்றம்