உள்நாடுபிராந்தியம்

மினுவாங்கொடையில் போதைப்பொருட்களுடன் 37 வயதுடைய ஒருவர் கைது

மினுவங்கொட பொலிஸ் பிரிவின் உன்னாருவ பகுதியில் ஒரு கிலோ 66 கிராம் ஹெரோயின் மற்றும் 308 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (06) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படை கோனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதான மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் நீதிமன்றத்திற்கு

தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது

editor

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று

editor