உள்நாடுபிராந்தியம்

பலாங்கொடை ரத்தனகொல்ல மலையில் திடீர் தீ விபத்து

பலாங்கொடை, ஹல்பே, ரத்தனகொல்ல மலையில் இன்று (08) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நிலவும் வறண்ட காலநிலை காரணமாக இந்தத் தீ வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ராணுவத்தினரும், பிரதேசவாசிகளும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீயை அணைக்கும் பணிக்கு பெல் 412 ரக ஹெலிகாப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை துணைக் குழு

ஜெரோம் பெர்னாண்டோவின் பிணை மனு மீதான விசாரணை ஜனவரியில்!

யாருக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதை அறிவித்த மெல்கம் கர்தினால்!