உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பொரளை துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வு

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு 8:40 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனால், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருவராக உயர்ந்துள்ளது.

ஸ்கூட்டரில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள், டி56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி ஐந்து இளைஞர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில், சுமார் 20-25 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், தாக்குதலின் பின்னர் குற்றவாளிகள் தப்பியோடியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த ஐந்து இளைஞர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், களனியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்திருந்தார்.

தற்போது, மற்றுமொரு இளைஞனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மீதமுள்ள மூவரின் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார்.

மேலும், இவர்களுக்கு எதிர்காலத்தில் மேலதிக அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில், இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Related posts

முச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிள் சாரதிகளுக்கான அறிவித்தல்

எமது ஆட்சிக் காலத்தில் நாம் மக்களைக் கைவிடவில்லை – நாமல் ராஜபக்‌ஷ எம்.பி

editor

மக்கள் வங்கி ATM களில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை