வெள்ளவத்தை பொலிஸார் சுமார் 3.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள “e” சிகரெட்டுகளுடன் ஒருவரைக் கைது செய்துள்ளனர்
சந்தேக நபர் 620 e-சிகரெட்டுகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை, ஸ்டாஃப் வீதியில் உள்ள வாசனை திரவியங்கள் மற்றும் சொக்லட்டுகள் விற்பனை செய்யும் நிலையத்தில் சட்டவிரோதமாக e-சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம சுற்றிவளைக்கப்பட்டு, சிகரெட்டுகளுடன் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராஜகிரியவைச் சேர்ந்த 34 வயதுடையவர்.