உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் ரயிலில் சிக்கி யுவதியின் கால் துண்டான துயரம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இன்று (07) யுவதி ஒருவர் ரயிலில் சிக்கி ஒரு காலை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த யுவதி தாமதமாக வந்ததால், புறப்படத் தொடங்கிய ரயிலில் ஏற முயன்றபோது கால் தடுமாறி விழுந்தார்.

இதனால், அவரது ஒரு கால் ரயிலில் சிக்கி துண்டானதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த யுவதி உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

-கஜிந்தன்

Related posts

“கிழக்கிலங்கையின் கல்விப் பொக்கிஷமான பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களின் மறைவு கவலை தருகின்றது” – ரிஷாட் எம்.பி அனுதாபம்

editor

எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயு குறித்து இன்று தீர்மானிக்கும்

சீரற்ற காலநிலையால் உயிரிழந்த பெண் : தகவல் வெளியாகியது