உள்நாடு

தடுத்து வைக்கப்பட்டுள்ள BYD வாகனங்களை விடுவிப்பதற்கு ஒப்புதல்

இலங்கை சுங்கத்தால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 991, BYD வாகனங்களை பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிப்பதற்கு சுங்கப் பணிப்பாளர் நாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (08) ஒப்புக்கொண்டார்.

வாகனங்களை தடுத்து வைப்பதற்கு எதிராக ஜோன் கீல்ஸ் சிஜி நிறுவனம் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட வாகனங்களின் வரிகளுக்கு இடையிலான வித்தியாசமாகக் கணக்கிடப்பட்ட 3.6 பில்லியன் ரூபாய் தொகையை, ஒரு அரசு வங்கிக்கு உத்தரவாதமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அந்த உத்தரவாதத்திற்குப் பொருந்தக்கூடிய வட்டியை மனுதாரர் நிறுவனம் செலுத்த ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டன.

முன்வைக்கப்பட்ட பல நிபந்தனைகளுக்கு மனுதாரர் தரப்பு ஒப்புக்கொண்ட நிலையில், இந்த வாகனங்களை விடுவிப்பது தொடர்பாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் நீதிமன்றத்தில் தனது உடன்பாட்டைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் – IMF பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்த ஜனாதிபதி அநுர

editor

10 நாட்களில் 578 அரிசி தொடர்பான சுற்றிவளைப்புகள்

editor

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைக்காக கொழும்பில் சில தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம்