அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நம்பிக்கை மீறல் தொடர்பான 15 அம்சங்களின் அடிப்படையில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இன்று (07) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அருண ஜெயசேகர பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றும்போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நீதியுடன் நடத்தப்படுமா என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்று அவர் கூறினார்.

அதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நியாயமாக நடத்தப்பட வேண்டுமென்றால், அருண ஜெயசேகர தனது பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அதன்படி, இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர.வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

Related posts

கித்துல் – பனை உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை

சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

ராஜித சேனாரத்ன இன்று நீதிமன்ற முன்னிலையில்