உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சுகாதார அமைச்சு அதிரடி அறிவிப்பு

பயிற்சியை நிறைவு செய்த 1,408 ஆரம்ப தர மருத்துவர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) II வைத்தியர் எச்.எம். அர்ஜுன திலகரத்ன இதனை அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அர்ஜுன திலகரத்ன விடுத்த அறிவித்தலில், 2024 ஒக்டோபர் 29ஆம் திகதி நிலவரப்படி பயிற்சியை நிறைவு செய்த 1,408 பேருக்கு ஆரம்ப தர மருத்துவ அதிகாரிகள் நியமனம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பதவிகளுக்கு தகுதி கொண்ட மருத்துவர்கள் சுகாதார அமைச்சின் மனிதவள முகாமைத்துவம் மற்றும் தகவல் கட்டமைப்பிற்குள் (HRMIS) பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து விண்ணப்பதாரர்களும் 2025 ஓகஸ்ட் 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை ஒன்லைனில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

மினுவங்கொடை கொவிட் கொத்தணி : 186 பேர் பூரண குணம்

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியோரை அழைத்துச் சென்ற பேருந்து விபத்து