உள்நாடு

போதைப்பொருளுடன் இந்தியர்கள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

12 கிலோகிராம் 160 கிராம் குஷ் ரக போதைப் பொருளுடன் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போதே இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22,42,43 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related posts

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத்தை மீள் திருத்துமாறு பிரேரணை

அரசாங்கம் சட்டம் ஒழுங்கினை சரியாக நிலைநாட்டி வருகின்றது – இளங்குமரன் எம்.பி

editor

பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரிப்பு