உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அனர்த்த நிவாரண உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய சீனா

சீன மக்கள் குடியரசு 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள அனர்த்த நிவாரண உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்றது.

சீனத் தூதுவர் அதிமேதகு குய் ஜென்ஹாங் அண்மையில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத துயகொந்தாவிடம் இந்த உபகரணங்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர்:

இலங்கைக்கு சீனா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை பாராட்டாமலிருக்க முடியாது.

எமது, நாடு அடிக்கடி இயற்கை அனர்த்தங்களை குறிப்பாக காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மோசமான வெள்ள நிலைமைகளை எதிர்கொள்கிறது.

இந்த நன்கொடை ஒரு சரியான நேரத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்தில் உதவி வழங்குவதை உறுதி செய்வதற்காக, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால் இந்த உபகரணங்கள் நிர்வகிக்கப்படும்.

இரு நாடுகளுக்குமிடையிலான வலுவான பிணைப்பை எடுத்துரைத்த அவர், இந்நன்கொடை அவசர காலங்களில் இலங்கையுடனான சீனாவின் உறவை பிரதிபலிக்கிறது என்பதை வலியுறுத்தினார்.

இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக சீனா இதற்கு முன்னரும் உதவி வழங்கியுள்ளது.

Related posts

சூரிய சக்தியில் இயங்கும் படகுகளை பயன்படுத்தி சுத்தம் செய்யப்படும் பேர வாவி

editor

கடற்தொழில் அமைச்சர் – இலங்கைக்கான சீன தூதுவர் இடையில் சந்திப்பு

editor

குறைவடைந்து வரும் மரக்கறிகளின் விலைகள்

editor