இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த 25% வரியை 50% ஆக உயர்த்துவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.
ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.