உலகம்விசேட செய்திகள்

அமெரிக்காவில் விமானம் விபத்து – 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்ல விமானங்கள், ஹெலிகொப்டர்கள் அம்பியூலன்ஸ்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் சின்லி நகரில் நோயாளியை ஏற்றுவதற்காக தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக அம்பியூலன்ஸ் விமானம் நியூ மெக்சிகோ மாகாணம் அல்புகியூர்கியு நகரில் இருந்து சென்றது.

சின்லி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமானம் எதிர்பாராத விதமாக ஓடுதளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து நேற்று (05) நண்பகல் 12:40 மணியளவில் நிகழ்ந்ததாகவும், விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விபத்தில் 2 விமானிகள், 2 வைத்திய ஊழியர்கள் விமானத்தில் பயணித்த 4 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

Related posts

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது

editor

இலங்கையை 4ம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் தள்ளியது அமெரிக்கா

AstraZeneca தடுப்பூசி தொடர்பில் WHO அறிவிப்பு