உள்நாடுபிராந்தியம்

மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு!

மண்மேடொன்று சரிந்து விழுந்தத்தில், அதில் புதையுண்ட ஐவர் காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா, சாமிமலை பிரதான வீதியில் பனியன் பலத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த ஐந்து பேரை அப்பகுதி மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (05) மஸ்கெலியா பகுதியில் பெய்த கனமழை காரணமாக, வீடொன்றின் மீது பாரிய மண் திட்டு சரிந்து வீழ்ந்த நிலையில் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஐவர் மீது இன்று (06) மதியம் 12.00 மணியளவில் மற்றொரு மண்மேடும் சரிந்து விழுந்துள்ளது.

பின்னர், மஸ்கெலியா வைத்தியசாலையின் வைத்தியர்களின் உதவியுடன், பொது மக்கள் இணைந்து மண் மேட்டின் கீழ் புதையுண்டிருந்த ஐவரையும் மீட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சீன நிதியுதவியில் 1996 வீடுகள் – ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ஹரினி பங்கேற்பு

editor

சாராயக் கம்பனிகளிடமிருந்து பணம் பெறுவோரின் விபரங்கள் விரைவில் – அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

editor

பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்!