உள்நாடுபிராந்தியம்

வெடிப்பொருட்களுடன் முதியவர் கைது

இரத்தினபுரியில் இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதகங்கொட பிரதேசத்தில் வெடிப்பொருட்களுடன் முதியவர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இறக்குவானை பகுதியில் வசிக்கும் 78 வயதுடைய முதியவர் ஆவார்.

சந்தேக நபரான முதியவரிடமிருந்து 02 கிலோ 888 கிராம் கோடையிட் , 09 கிலோ 597 கிராம் அமோனியம் , 15 வோட்டர் ஜெல் குச்சிகள் , டெட்டனேட்டர் 25 மற்றும் வெடிமருந்து நூல் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட முதியவர் மேலதிக விசாரணைகளுக்காக இறக்குவானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

கபூரியாவைப் பாதுகாப்போம் – கவனயீர்ப்பு போராட்டம் 

ருஷ்தியின் கைது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளிட்டுள்ள அறிக்கை

editor