உள்நாடு

இன்று 12 மணித்தியால நீர் வெட்டு

பராமரிப்பு பணிகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (05) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, நாகொட, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய மற்றும் வாத்துவ பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும்.

இந்த நீர் வெட்டு காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – தீர்ப்பு வழங்கும் திகதியை அறிவித்த உயர் நீதிமன்றம்

editor

பொல்துவை சந்தியில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

அமைதியான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை குறித்து சஜித் கேள்வி