உள்நாடுபிராந்தியம்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை – 5 பேர் கைது

மாதிவெல பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் விபசார விடுதி நேற்று (03) இரவு மிரிஹான பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின்போது நிறுவனத்தின் முகாமையாளர், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர்.

பாதுக்க மற்றும் பூண்டுலோயாவைச் சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இரண்டு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபர்கள் திக்வெல்ல மற்றும் பன்னிபிட்டிய பகுதிகளில் வசிக்கும் 22, 25 மற்றும் 33 வயதுடையவர்கள்.

மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

அரச விடுமுறை தினத்தில் ஜனாதிபதி கோரிக்கை

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவு

editor

வடகாசாவிலிருந்து வெளியேறவும் : 3மணி நேர காலக்கெடு கொடுத்த இஸ்ரேல்