அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில், மைத்திரி அவசர சந்திப்பு – காரணம் வெளியானது

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவதற்கான யோசனை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான – ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது இந்த யோசனையை உயர் நீதிமன்றத்தில் சவால் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்தால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட யோசனையின் கீழ், அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் உத்தியோகபூர்வ குடியிருப்பு, செயலக கொடுப்பனவுக்கான கட்டணம் மற்றும் உத்தியோகபூர்வ போக்குவரத்துகள் ரத்து செய்யப்படுகின்றன.

இந்தநிலையில் குறித்த யோசனை அதன் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், ஐந்து முன்னாள் ஜனாதிபதிகளும், 97,500 ரூபாய் என்ற மாதாந்த ஓய்வூதியத்தைத் தவிர அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிள்ளையானின் கொலைகள் தொடர்பில் அம்பலமாகும் தகவல்கள்!

editor

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்வு

பொருளாதார நெருக்கடிக்கு சபாநாயகரும் பொறுப்பு