உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

மாத்தறை, கபுகம பகுதியில் இன்று (03) காலை 6.35 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்து வீட்டினுள் இருந்த ஒருவரை குறிவைத்து T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் 48 வயதான ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர் பேருந்து உரிமையாளர் மற்றும் வர்த்தகர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

அரச நிர்வாக சேவை அதிகாரிகள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

அந்நிய செலாவனி விதிமுறைகளை தளர்த்த தீர்மானம்

NPP பெண் எம்.பியிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய SJB எம்.பி

editor