உள்நாடு

போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக சொத்துக்களை வாங்கிய பெண் ஒருவர் கைது

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டிய பணத்தின் மூலம் சொத்துக்களை வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபர் கடந்த 29 ஆம் திகதி பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போகுந்தர, பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஆவார்.

சந்தேக நபரின் முந்தைய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில், அவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேக நபர் சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 3 கோடி ரூபாவைக் கொண்டு வாங்கிய பிலியந்தலை பகுதியில் உள்ள ஒரு நிலம், பணமோசடி சட்டத்தின் கீழ் 9ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்கப்பட்டது.

இது தொடர்பாக ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர், இந்த முடக்கம் தொடர்பான உத்தரவை 15.10.2025 வரை நீதிமன்றம் நீடித்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபர் கடந்த 29ஆம் திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு – நிசாம் காரியப்பரின் கேள்விக்கு அமைச்சர் பதில்

editor

இலங்கை வந்த ஈரானின் முதல் பெண்மணி பற்றி உங்களுக்கு தெரியுமா?

இன்று 5 மணி நேர மின்வெட்டு