உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

குருணாகலில் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலுகேவல பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01) பிற்பகல் மாவத்தகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாவத்தகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இலுகேவல பகுதியை சேர்ந்த 40 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட போர் 12 ரக துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அடுத்த மாதம் முதல் தபால் கட்டணங்களில் திருத்தம்

தனது கல்வித் தகைமைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் சஜித் – வீடியோ

editor

பணமில்லையால் இலங்கையின் பிரதான சேவை இருளில்…!