உள்நாடுகாலநிலை

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (02) பிற்பகல் 1 மணியளவில் இருந்து அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

Related posts

தினேஷ் சாப்டர் கொல்லப்பட்ட போது காருக்கு அருகில் இருந்து வேகமாக சென்றவர் யார்?

ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்!

editor