அரசியல்உள்நாடு

கல்முனை மேலதிக பிரதேச செயலகம் விவகாரம் தொடர்பில் நிசாம் காரியப்பர் எம்.பி வெளியிட்ட தகவல்

பொதுப் நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், 2025 ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள கல்முனை மேலதிக பிரதேச செயலகம் விவகாரம் தொடர்பான பாராளுமன்ற கலந்தாய்வுக்குழு கூட்டம் குறித்து ஏற்படக்கூடிய சட்டப் பிரச்சினை பற்றி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

ஏற்கனவே இந்த விடயம் சம்பந்தமாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமச்சிக்கு எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகள், நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

குறித்த வழக்குகள் – CA/WRT/645/2023 (மனுதாரர் M H M . முஃபாரிஸ்), CA/WRT/67/2023 (மனுதாரர் த. கலையரசன்), மற்றும் CA/WRT/300/2018 (மனுதாரர் ஏ.எம். நசீர்) – தற்போது நவம்பர் 2026 ஜனவரி 28 ஆம் தேதி விசாரணைக்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்றும், அமைச்சின் செயலாளரும் ஏற்கனவே அமைச்சின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு செயலாளர் மூலமாக வழங்கிய சத்தியக் கடதாசியில் முன் வைத்துள்ள சூழ்நிலையில் அதற்கு புறம்பான முடிவுகள் எடுக்கும் பொழுது ஏற்படுகின்ற சட்ட சிக்கலை பற்றி சுட்டிக்காட்டி உள்ளார்.

நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வழக்குத் தரப்புகள் பங்கேற்காமல் நடைபெறும் பாராளுமன்ற விடயங்கள், சட்ட முறைப்படி பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்த நிசாம் கரியப்பர், கூட்டம் நடைபெற வேண்டுமென்றால் வழக்கில் உள்ள அனைத்து தரப்பினரும் அவசியம் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த கடிதம் பாராளுமன்ற சபாநாயகர், அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபருக்கும் பிரதி அனுப்பப்பட்டுள்ளது.

Related posts

ஊழல்வாதிகளுக்கு இந்த அரசாங்கத்தில் இடமில்லை – பிரபாகர் பங்ராஸ்

editor

யாழில் பயிர்களிடையே அதிகரித்த பூச்சித்தாக்கம்!

யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி விமான நிலையத்திற்கு போக்குவரத்து சேவை.