உள்நாடுபிராந்தியம்

பொறியியலாளர் முனாஸ், பதில் பிரதி மாகாணப் பணிப்பாளராக நியமனம்

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பதில் பிரதி மாகாணப் பணிப்பாளராக பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிமனையில் இவர் தனது கடமைகளை நேற்று (30) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சாய்ந்தமருதைச் சேர்ந்த பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ் வடமாகாணம் வவுனியா, முல்லைத்தீவு கிழக்கு மாகாணம் அம்பாறை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளராக 16 வருடங்கள் கடமையாற்றி நிலையிலேயே இவ்வாறு பதில் பிரதி மாகாணப் பணிப்பாளராக கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் நியமிக்கப் பட்டுள்ளார்.

பட்டய பொறியியலாளரான எம்.எம்.எம். முனாஸ் பொறியியல் துறையில் மாஸ்டர் பட்டத்தை மொறட்டுவ பல்கலையிலும் வீதி நிர்வாகம் கற்கை நெறியை டோக்யோ ஜப்பானிலும் நிறைவு செய்துள்ளார்.

இவர் டோஹா கட்டாரிலுள்ள அமெரிக்க விமான தளத்தில் சிவில் பொறியியலாளராக கடமையாற்றிய நிலையில், சமூக நலனை கருத்திற் கொண்டு அரச பணியில் இணைந்து கொண்டார்.

இளம் வயதில் இவ்வாறான பதவி என்பது பொறியியலாளர் முனாஸின் அர்ப்பணிப்பான பணிக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றியாகும்.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் செயலாளராக பணியாற்றி வரும் இவரின் பணிகளை ஊர் மக்கள் மெச்சுமளவுக்கு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-நூருல் ஹுதா உமர்

Related posts

தகுதிவாய்ந்த பட்டதாரிகள் தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர

editor

கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் புதனன்று