உள்நாடுபிராந்தியம்

பெண் ஒருவர் தற்கொலை

யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் நோய்களின் தாக்கத்தைத் தாங்க முடியாமல், நேற்று முன்தினம் (30) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நோய்களின் தீவிரத்தைத் தாங்க முடியாமல், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

70 வயதுடைய அருந்தவரத்தினம் சத்தியஞானதேவி என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது உடலின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

-கஜிந்தன்

Related posts

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படும் – அமைச்சர் வசந்த சமரசிங்க அதிரடி அறிவிப்பு

editor

துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பிக்கு ஒருவர் உயிரிழப்பு