உள்நாடுகாலநிலை

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (01) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது சமீபத்திய முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. வரையிலான கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, புத்தளம் மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க, மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

நாடு இன்னும் முழுமையாக சாதாரண நிலைக்கு திரும்பவில்லை – விஜித ஹேரத்

தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ரணில் விக்கிரமசிங்கவின் பாதையில் செல்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor