உள்நாடுவணிகம்

American Plastics நிறுவனத்துக்கு தேசிய உயர் கைத்தொழில் வர்த்தகநாம விருது

இலங்கையின் தளபாட உற்பத்தித்துறையில் முன்னணி வர்த்தகநாமமான American Plastics தனியார் நிறுவனம் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய உயர் கைத்தொழில் வர்த்தகநாம விருது விழாவில் திறமைச் சான்றிதழ் விருதை (இறப்பர், பிளாஸ்ரிக் மற்றும் அது சார்ந்த கைத்தொழில் பிரிவு) வென்றுள்ளது.

2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட American Plastics நிறுவனம் (www.americanplastics.lk) உயர் தரத்திலான பல்வேறு பிளாஸ்ரிக் பொருட்களை உற்பத்தி செய்கிறது.

பிளாஸ்ரிக் பாத்திரங்கள், குளியலறைக்கு தேவையான தொட்டிகள், கழிவுத் தொட்டிகள், ராக்கைகள், பீங்கான்கள், சமையலறை சாதனங்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான BPA உள்ளடக்கபடாத சாதனங்கள் உள்ளிட்ட அன்றாடம் வீட்டுக்கு தேவையான பொருட்களும் அவற்றில் அடங்கும். அந் நிறுவனம் உற்பத்தி செய்யும் புதிய ரக பிளாஸ்ரிக் தளபாடங்களுக்கு சந்தையில் பெருமளவு கிராக்கி நிலவுகிறது.

தரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் American Plastics நிறுவனம் உயர் தரத்திலான நீண்ட காலம் உழைக்கக்கூடிய மூலப்பொருட்களை பாவிப்பதோடு சகல உற்பத்திப் பொருட்களும் அதன் உற்பத்தி கட்டத்தில் தீவிர தரப் பரிசோதனைக்குட்படுத்தப்படுகிறது. உற்பத்திச் செயற்பாடுகளுக்கு 100% Virgin Food Grade மூலப்பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன.

ஹோமாகம மற்றும் பானலுவைவில் அமைந்துள்ள அந் நிறுவனத்தின் கைத்தொழிற்சாலைகள் Injection, Blow மற்றும் Parison நவீன தொழில்நுட்பத்திலான இயந்திரத் தொகுதிகளை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி கைத்தொழிற்சாலைகள் FSSC 22000, ISO 14001, HACCP மற்றும் GMP போன்ற தரச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.

American Plastics நாடு முழுவதும் உள்ள பல்வேறு பாடசாலைகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பாடசாலை நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சமூகத் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

கொழும்பு, குருநாகல் மற்றும் மேலும் பல நகரங்களில் கிளை வலையமைப்பைக் கொண்டுள்ள இந்நிறுவனம், எதிர்காலத்தில் தமது கிளை வலையமைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளரின் அன்றாடத் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான எளிய மற்றும் நடைமுறைக்குரிய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதே இந் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையாகும்.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற 49ஆவது தரக் கட்டுப்பாட்டு வட்ட சம்மேளனத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் American Plastics நிறுவனம் பெற்றது.

Pinnacle 2024 விருது விழாவில் இந்த நிறுவனத்திற்கு ஆண்டின் சிறந்த வீட்டு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் விநியோகஸ்தர் விருதும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் பாதிப்பு தொடர்பில் ஆராய நெதர்லாந்திலிருந்து விசேட குழு

சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

தேயிலை உற்பத்தி வீழ்ச்சி