உள்நாடு

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்!

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி தலைமையக பொலிஸின் இரண்டு உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இது தொடர்பில கூறுகையில், ஒரு சார்ஜன்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார்.

பல குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பொலிஸ் கூண்டில் இருந்த சந்தேக நபர் நேற்று (30) கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறியதாகவும் அறையின் கதவு திறக்கப்பட்டபோது அவர் பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

குறித்த சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர். மேலும் சமீபத்தில் பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களிலும் அவர் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சந்தேக நபர் தப்பிச் சென்றது தொடர்பாக இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் பொறுப்பாளரும் அப்போது பொலிஸ் நிலையத்தின் பொறுப்பாளரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தலைமறைவான சந்தேக நபரைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழு ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

வீதி ஒழுங்கு சட்டத்தில் இன்று முதல் மாற்றம்

கொவிட் 19 – தொடர்ந்தும் 132 நோயாளிகள் சிகிச்சையில்

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கினால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு – நாமல்

editor