உள்நாடுவிளையாட்டு

நட்புறவு கிரிக்கெட் கிண்ணம் சம்மாந்துறை பிரதேச சபை வசம்.!

சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் வைத்தியசாலை அணிகளுக்கிடையே நடைபெற்ற சிநேகபூர்வ கிரிக்கெட் தொடரில், சம்மாந்துறை பிரதேச சபை அணி வெற்றி கிண்ணத்தைத் தட்டிச் சென்றது!

இந்த நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மைதானத்தில் இன்று இடம்பெற்றது

பிரதேச சபை அணியில் பிரதேச சபை உறுப்பினர்களான பஹ்மி சுலைமான், ஆசிக் றபீக் , ஏ.சி.எம் நயிம் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

-ஷாதிர் ஏ ஜப்பார்

Related posts

கொழும்பிற்கு வெளியே எரிபொருளுக்கு தட்டுப்பாடு

கப்ராலுக்கு தொடர்ந்தும் வெளிநாடு செல்ல தடை

இரண்டு பிரபலமான புதிய அங்கீகாரங்களை பெற்ற Amazon Campus!