உள்நாடு

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு நாளை!!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரனை நாளை(30) மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது.

இவ் வழக்கின் இடையீட்டு மனுதர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணியான பைசார் முஸ்தபா தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகவுள்ளனர்.

வழக்காளியான கலையரன் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகவுள்ளனர்.

இவ் வழக்கு தொடர்பில் கடந்த 2023ஆம் ஆண்டு இடைக்கால தீர்ப்பு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கியமான நீதிமன்ற விவாதமொன்று நாளை இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நான்கு நீதியரசர்கள் நியமனம்.

editor

தனிமைப்படுத்தலில் இருந்து இதுவரை 7515 பேர் வீட்டிற்கு

பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொரு நபர் பலி