உள்நாடு

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நகர சபையின் உறுப்பினர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ள கம்பளை நகர சபையின் பொது ஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் ஒருவரை, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் மாஜிஸ்திரேட் நீதவான் நந்தனி காந்திலதா நேற்று (27) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே இவ்வாறான குற்றச்செயலில் ஈடுபட்டிருந்த இவர், இம்முறையும் தேர்தலில் போட்டியிட்டு நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தெரிவாகி ஒரு மாதமாவதற்கு முன்பே இவ்வாறு கஞ்சாவுடன் கம்பளை பொலிஸாரிடம் இவர், அகப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக அவர் கஞ்சா, கசிப்பு, சட்டபூர்வமற்ற மதுபானம் ஆகியவற்றை விற்பனை செய்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அவர் தேடப்பட்ட நிலையில் மூன்று கிராம் கஞ்சாவுடன் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

-லோரன்ஸ் செல்வநாயகம்

Related posts

கட்சிப்பற்றாளர்களை இனங்காண்பதற்கான பொன்னான சந்தர்ப்பம்

இரும்புத் தாது விலைகளும் அதிகரிப்பு

பராட்டே சட்டத்தை நிபந்தனைகளுடன் இரத்துச் செய்ய அரசாங்கம் எடுத்த முடிவுக்கு நன்றி தெரிவித்தார் சஜித் பிரேமதாச

editor