தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதோடு 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிவேக நெடுஞ்சாலையின் அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் 175ஆவது கிலோமீற்றர் அருகே வேன் ஒன்றின் டயர் வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் 72 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.