உள்நாடுபிராந்தியம்

திருமணத்திற்கு செல்ல தயாரான நான்கு வயது சிறுமி – ஆற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சோக சம்பவம்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சிக்கு நீர் ஏந்தி செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் விழுந்த நான்கு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்லவிருந்த நிலையில், தனது மகளை தயார் நிலையில் வைத்து விட்டு சிறுமியின் தாய் தயாராகி கொண்டிருந்த வேளை, குறித்த சிறுமி வீட்டின் அருகிலிருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (26)) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்ட போது சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னர் நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுமி சடலமாக மீட்கப்பட்டு கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீடகப்பட்ட சிறுமி கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தை சேர்ந்த நான்கு வயதுடைய கிரேக்சிக்கா நெகோமி என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

-சதீஸ்குமார்

Related posts

ஜனாதிபதி மற்றுமொரு அரச நிறுவனத்திற்கு விஜயம்

ரொபேர்ட் கப்ரோத் இலங்கைக்கு

8ஆம் திகதி அரசு கவிழுமா?