உள்நாடு

பஸ் லலியாவின் சகாக்கள் கைது!

துபாயை தளமாகக் கொண்டு நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பை நடத்தும் ‘பஸ் லலியா’ எனப்படும் லலித் கன்னங்கரவின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நான்கு நபர்கள் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹங்வெல்ல பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சப்-இன்ஸ்பெக்டர் நுவன் திலகரத்ன உள்ளிட்ட குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வீதித் தடை அமைக்கப்பட்டிருந்த நிலையில் அதனைத் தவிர்த்து தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 7 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

Related posts

ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதிக்கு 03 முக்கிய விடயங்கள் குறித்து கவனம்

இராணுவ தளபதி வெளியிட்ட அறிவித்தல்

சற்றுமுன்னர் 06 பேர் அடையாளம்