அரசியல்உள்நாடு

பல நாடுகளின் தூதுவர்களுடன் முக்கிய சந்திப்பு நடத்தினார் பிரதமர் ஹரிணி

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, ஜூலை 25 ஆம் திகதி, பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார்.

இதன் போது, (டாக்காவைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான பூட்டான் தூதுவர் கௌரவ டஷோ கர்மா ஹமு டோர்ஜி, (கொழும்பைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் கௌரவ சேர்ஜி விக்டோரோவ், (புதுடில்லியைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான ஜோர்தான் தூதுவர் கௌரவ யூசெப் முஸ்தபா அப்தெல்கனி, இலங்கைக்கான எரித்திரியா நாட்டின் தூதுவர் கௌரவ அலம் வோல்டெமரியம், மற்றும் (இஸ்லாமாபாத்தைச் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான உஸ்பெகிஸ்தான் தூதுவர் கௌரவ அலிஷர் துக்தயேவ் ஆகியோருடன் இந்தச் சந்திப்புகள் நடைபெற்றன.

இந்த சந்திப்பானது பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடனான இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

பிரதமருடனான இந்த கலந்துரையாடலில் அனைத்து தூதுவர்களையும் வரவேற்ற பிரதமர், பரஸ்பர நலன்கள், நிர்வாகத்தில் ஒத்துழைப்பு, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்தி இந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

ஆடை உற்பத்தி, கல்வி, கலாச்சாரப் பரிமாற்றம், ஏற்றுமதி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சுற்றுலாத் துறை விரிவாக்கம் ஆகியவை இந்தக் கலந்துரையாடலின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் திருமதி ருவினி முனதாச ஆகியோர் கலந்துகொண்டனர்.

-பிரதமர் ஊடகப் பிரிவு

Related posts

சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

தகவல் தொழிநுட்ப சங்க தலைவர் ரஜீவ் மத்தியு கைது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு