உள்நாடு

பஸ் – கெப் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 5 பேர் காயம்!

அநுராதபுரம் – குருணாகல் பிரதான வீதியில் 2ஆவது மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் மற்றும் கெப் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது கெப் வாகனத்தின் சாரதியும் பஸ்ஸில் பயணித்த நால்வரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் இருவரும் ஆசிரியை ஒருவரும் காயப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

OTTO குளியலறை சாதனங்களுக்கு தரத்துக்கான SLS சான்றிதழ்

editor

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது