அரசியல்உள்நாடு

காணிப்பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு – பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி, நீர்ப்பாசன பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஏனைய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்படும் எனவும் அவர் சபையில் குறிப்பிட்டுள்ளார்.

நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், காதர் மஸ்தான் எம்.பி பாராளுமன்றத்தில் நேற்று (24) எழுப்பிய

கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்த பிரதியமைச்சர், தொடர்ந்து உரையாற்றுகையில், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் காணி பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 54,000 ஏக்கர் காணி, வவுனியா மாவட்டத்தில் 24,000 ஏக்கர் காணி மற்றும் மன்னார் மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட ஹெக்டெயார் காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

வன பாதுகாப்பு திணைக்களத்தால் அதற்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது.

தற்போது அது குறித்தான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையே நடத்தப்பட்டுள்ளது என்பதால் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக மாவட்ட ரீதியில் குழுக்கல் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்படும் என அவர் தெரிவித்தார்.

Related posts

இன்று முதல் 10 மில்லியன் முட்டைகள் சந்தைக்கு!

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – ஜனாதிபதி அறிவிப்பு.

காஸாவுக்கான உணவுடன் ரஃபா கடவையை கடந்த அத்தியாவசிய பொருட்கள்