உள்நாடு

இலஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (24) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு – கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஆவார்.

இவர் ஒரு இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மக்கள் பணம் தந்தால் தான் நான் சிறைக்கு செல்வதை தவிர்க்க முடியும் – மைத்திரி

பட்ஜட்டுக்கு முன் அமைச்சரவையில் மாற்றம்: களமிறங்கும் பசில்

இன்று மின் கட்டணம் குறையுமா ?