அரசியல்உள்நாடு

பிள்ளையானின் அடிப்படை மனுவை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானம்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (23) தீர்மானித்தது.

தமது சட்டவிரோத கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து இவர்,இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட 12(1) (சட்டத்தின் முன் சமத்துவம்), 12(2) (அரசியல் கருத்தை அடிப்படையாகக் கொண்ட பாகுபாடு), 13(1) (காரணமின்றிய கைது), மற்றும் 13(2) (சட்ட நடைமுறைக்கு வெளியே கைது) முதலான அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சிசநேசதுரை சந்திரகாந்தன் தமது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளளார்.

மனுதாரர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா மற்றும் சட்டத்தரணி உதய கம்மன்பில ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியிருந்தனர்.

இம்மனுவைத் தொடர நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், விசாரணைக்கான திகதி தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related posts

பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது – அனைத்து பாடசாலைகளுக்குமான சுற்றறிக்கை வௌியானது

editor

5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து