அரசியல்உள்நாடு

இ.தொ.கா உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்!

2025ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மாவட்ட ரீதியில் போட்டியிட்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியிருந்த உறுப்பினர்களுடனான விஷேட கலந்துரையாடலான கட்சியின் தலைமையகமான சௌமிய பவனில் நேற்று(22) இடம்பெற்றது.

இதன்போது கட்சியுடன் இணைந்த கொள்கைகளுக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்படவேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான புதிய சில நடைமுறைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்படமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் மலையக வரலாற்றில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்நோக்கிய சவால்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொது மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் போது மேற்கொள்ள வேண்டிய விடயங்கள், இ.தொ.காவின் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் தமது சபைகளில் மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பாகவும், மேலும் தமது வட்டாரத்தில் மக்களுடன் இணைந்து பணியாற்றுவதனூடாக எவ்வாறு செயற்படுகின்றார்கள் என்ற தகவல்களை பதிவு செய்து கட்சியின் உயர்பீடத்திற்கு சமர்ப்பிப்பதற்கான “தகவல் பதிவுப்புத்தகம்” வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்படும் பதிவுப்புத்தகத்தினை பரிசீலனை மேற்கொள்வதற்கான விஷேட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களினால் மீள் பரிசீலனை மேற்கொண்டு கட்சியின் உயர்பீடத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையின் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் தங்களது கடைமைகளில் தவறிழைக்கும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பாகவும் விபரமாக அனைவருக்கும் தெளிவூட்டப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலின்போது, இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும், தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், பிரதித் தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தவிசாளர் ராஜதுரை, பிரதி பொதுச்செயலாளர் செல்லமுத்து, உபத்தலைவர்கள், உயர்பீட உறுப்பினர்கள் அடங்களாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

Related posts

MV X-Press Pearl கப்பல் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்!

நாளை முதல் பேரூந்து சேவைகள் மட்டு