உள்நாடு

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு

மாரவில மற்றும் சீதுவையில் அண்மையில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன், இந்த ஆண்டு நாட்டில் பதிவான மொத்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவங்களில், 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுவரை நடைபெற்று வரும் விசாரணைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சம்பவத்தின்போது உந்துருளிகளை செலுத்திய 15 பேரும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 150 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

LIVE | பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

editor

இலங்கை குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதில் புதிய தீர்மானம்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேர் கைது

editor